சுடச்சுட

  

  "மனித உரிமை மீறல்​க​ளுக்கு எதி​ராக மாண​வர்​கள் இணைய வேண்​டும்'​

  By dn  |   Published on : 12th December 2013 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனித உரிமை மீறல்​க​ளுக்கு எதி​ராக மாணவ சமு​தா​யம் ஒன்​றி​ணைந்து போராட வேண்​டும் என திரு​நெல்வேலி சட்​டக் கல்​லூரி முதல்​வர் என்.​ எபி​நே​சர் ஜோசப் கூறி​னார்.​

  திரு​நெல்வேலி மாவட்ட அறி​வி​யல் மையத்​தின் சார்​பில்,​​ மனித உரி​மை​கள் தின விழா மைய வளா​கத்​தில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ விழா​வில்,​​ திரு​நெல்வேலி சட்​டக் கல்​லூரி முதல்​வர் என்.​ எபி​நே​சர் ஜோசப் கூறி​ய​தா​வது:​

  இந்​தியா சுதந்​தி​ரம் பெற்ற பின் அமைக்​கப்​பட்ட அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​தில் மனித உரி​மை​க​ளுக்​கான வரை​மு​றை​க​ளும்,​​ வழி​காட்டு நெறி​மு​றை​க​ளும் தனித்​த​னியே வகுக்​கப்​பட்டு,​​ மீறல்​க​ளுக்​கு​ரிய தண்​ட​னை​க​ளும் வரை​ய​றுக்​கப்​பட்​டுள்​ளன.​

  மனி​த​னின் அடிப்​படை உரி​மை​க​ளாக பிறப்பு முதல் இறப்பு வரை​யி​லும் எண்​ணற்​றவை வகுக்​கப்​பட்​டுள்​ளன.​ ஒவ்​வொரு மனி​த​னும் அவ​ர​வர் விருப்​பத்​துக்கு தகுந்​த​படி சமூ​கத்​தில் வாழ்க்கை நடத்​திட சட்​டப் பூர்வ உரி​மை​கள் உள்​ளன.​ அவற்றை மீறும் வகை​யில் யாரும் செயல்​ப​டக் கூடாது.​ ஆணாக இருந்​தா​லும்,​​ பெண்​ணாக இருந்​தா​லும் மனித உரிமை மீறல்​க​ளுக்கு எதி​ராக குரல் கொடுக்க தயங்​கக் கூடாது என்​றார் அவர்.​

  விழா​வில்,​​ பல்​வேறு கல்​லூ​ரி​க​ளைச் சேர்ந்த 200-க்கும் மேற்​பட்ட மாணவ,​​ மாண​வி​கள் கலந்து கொண்​ட​னர்.​ மனித உரி​மை​கள் தொடர்​பான விழிப்​பு​ணர்வு வாச​கங்​கள் எழு​தும் போட்​டி​யில் பங்​கேற்ற இந்த மாண​வர்​க​ளில் சிறந்த வாச​கங்​களை எழு​திய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்டு பரி​சு​கள் வழங்​கப்​பட்​டன.​ மாவட்ட அறி​வி​யல் மைய அதி​காரி டி.​ சீதா​ராம் வர​வேற்​றார்.​ கல்வி உத​வி​யா​ளர்​கள் பி.​ மாரி​லெ​னின்,​​ என்.​ பொன்​ன​ர​சன் ஆகி​யோர் பேசி​னர்.​

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai