Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மகத்தானது: வி.கே. சுப்புராஜ்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மகத்தானது: வி.கே. சுப்புராஜ்

    By dn  |   Published on : 12th December 2013 04:00 AM  |   அ+அ அ-   |    |  

    மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை உறுதி செய்யப்படும் என இந்திய ரசாயனத்துறை சிறப்புச் செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.

     

    ஸ்காட் நிறுவனம், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோர்தா அமைப்புடன் இணைந்து திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி கிராமத்தில் ஸ்காட் மருத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.

    மருத்துவம், ஆர்தோ அறுவை சிகி்ச்சை, பிசியோதிரபி மையம், பேச்சு பயிற்சி மையம், உடல் இயக்கப்பிரிவு, விளையாட்டு மையம் உள்ளிட்ட 19 பிரிவுகளாக கொண்ட இந்த மறுவாழ்வு மையத்தினை புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய இரசாயனம், உரங்கள்துறை சிறப்பு செயலரும், நிதித்துறை ஆலோசகருமான வி.கே. சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    மையத்தின் பிற அரங்குகளை கோர்தா அமைப்பின் தலைவர் ஜான்காலே, முன்னாள் தலைவர்கள் பேராசிரியர் டெனிஸ் ஐ.எப். லூசி, பேராசிரியர் ஜோசப்ஹெளடன் ஆகியோர் திறந்தனர்.

    தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற ஸ்காட் அன்பு இல்ல மாற்றுத் திறனாளி மாணவன் மோகன், தொடர் ஓட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சுப்பையா மற்றும் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வி.கே. சுப்புராஜ் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கான சேவை மகத்தானது. மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

    விழாவுக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஏ. ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். ஸ்காட் குழுமத் துணைத் தலைவர் அமலிகிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் கி. அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்காட் குழும நிறுவனத் தலைவர் எஸ். கிளிட்டஸ்பாபு வரவேற்றார்.

    நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ரா. தம்பித்துரை, கு. பார்த்தீபன், ஸ்காட் நிறுவன மேலாளர் இக்னேசியஸ்சேவியர், பொன்னாக்குடி ஊராட்சித் தலைவர் பி.கே. எம். முருகன்,

    ஆய்க்குடி அமர்சேவா மையத் தலைவர் ராமகிருஷ்ணன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நிர்வாகஅலுவலர் கிருஷ்ணகுமார், முதல்வர் கே. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்காட் கிராம மேம்பாட்டு பணிகள் குழுவின் திட்ட இயக்குநர் ஜி. நாகராஜன் நன்றி கூறினார்.

    kattana sevai