சுடச்சுட

  

  அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிப்பதோடு, ரூ. 10 ஆயிரத்துக்கு குறையாத மாதச் சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்புத் திட்டம் வழங்க வேண்டுóம். 45 நாள்களுக்குள் தொழிற்சங்கம் பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. நிர்வாகி ஏ. தர்மன், சி.ஐ.டி.யூ. நிர்வாகி ஆர். மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி காசிவிஸ்வநாதன், பி. சுப்பிரமணியன், ஜி. ரமேஷ், கே. கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். எம். ராஜாங்கம், ஆர். முருகேசன், எம்.எஸ். பாலகிருஷ்ணன், கே. கணேசன், எம். பாக்கியம், பி. ஆனந்தநாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில், பி. பொன்னுசாமி, பேட்டை இப்ராஹிம், எல். குருசாமி, நாகராஜன், பழனியப்பன், முருகேசன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai