சுடச்சுட

  

  அபிலிம்பிக் போட்டி: அமர்சேவா சங்க மாற்றுத் திறனாளிகள் சிறப்பிடம்

  By dn  |   Published on : 13th December 2013 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தென்பிராந்தியத்துக்கான அபிலிம்பிக் போட்டிகள் சென்னையில் 2 நாள்கள் நடைபெற்றன.

  சென்னை வித்தியாசகர் நிறுவனத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். ஆங்கில பாடநூல் வகைப்படுத்துதல் மற்றும் கணினி அடிப்படைச் செயலாற்றல் ஆகிய போட்டிகளில் ஜி. சரஸ்வதி 2 தங்கப் பதக்கங்கள் பெற்றார். கூடை தயாரித்தல் போட்டியில் செல்வி தங்கப் பதக்கம் வென்றார். வி. முருகன், கணினி டிசைனிங் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஆடை தயாரித்தல் போட்டியில் கண்ணபெருமாள் வெண்கலப் பதக்கமும், கோவிந்தன் கூடை தயாரிக்கும் போட்டியில் 3-ஆவது பரிசும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை சங்கத் தலைவர், செயலர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai