சுடச்சுட

    

    குடிமகன்களின் உயிருக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கழிவுகள் கலந்த மது விற்கப்படுவதாக, ஆட்சியரிடம் அகில பாரத அனுமன் சேனை இயக்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

    அமைப்பின் மாநகரத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலர் சீனிவாசன், மாணவரணித் தலைவர் முத்துக்குமார், மாநகரச் செயலர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை திரண்டு வந்தனர்.

    மூடி உடைக்கப்படாத மது பாட்டிலுடன் வந்திருந்த அவர்கள், அந்த மதுவில் குப்பை, தூசி, கழிவுகள் மிதப்பதைச் சுட்டிக்காட்டினர்.

    ஏற்கெனவே மதுப் பழக்கத்தால் பலரும் அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்து வரும் சூழலில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கழிவுகள் கலந்த மது விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai