சுடச்சுட

    

    கூடங்குளம் அணு மின் நிலையத்தை பார்வையிட்ட வெளிநாட்டு விஞ்ஞானிகள்

    Published on : 13th December 2013 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணுசக்தி கட்டுப்பாட்டு (ஒழுங்குமுறை) வாரியம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளின் விஞ்ஞானிகள் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், முதலாவது உலையில் கடந்த அக். 22-இல் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் அதிகபட்சமாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து மத்தியத் தொகுப்பில் இணைக்கப்பட்டது.

    பின்னர், ஆய்வுக்காகவும் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் ஜெனரேட்டர் அடிக்கடி நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. கடைசியாக பராமரிப்புப் பணிகளுக்குப் பின்பு கடந்த 10-ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    சர்வதேச கருத்தரங்கு: இந்நிலையில், அணுசக்தி தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வி.வி.இ.ஆர். (நீர்-நீர்-ஆற்றல் அணு உலை அல்லது அழுத்தநீர் அணு உலை) முறையில் அணு மின் உற்பத்தி நடைபெறும் ரஷியா, செக்-குடியரசு, உக்ரைன், பல்கேரியா, அர்மேனியா, பின்லாந்து, ஜெர்மனி நாடுகளின் விஞ்ஞானிகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.

    கூடங்குளத்தில் ஆய்வு: இதனிடையே, அணுசக்திக் கட்டுப்பாடு (ஒழுங்குமுறை) வாரியம் (ஹற்ர்ம்ண்ஸ்ரீ ங்ய்ங்ழ்ஞ்ஹ் ழ்ங்ஞ்ன்ப்ஹற்ர்ழ்ஹ் க்ஷர்ஹழ்க்) தலைவர் எஸ்.எஸ். பஜாஜ், துணைத் தலைவர் எஸ். துரைசாமி தலைமையில் வெளிநாட்டு விஞ்ஞானிகள் 14 பேர் உள்பட மொத்தம் 24 பேர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் வந்தனர்.

    பின்னர், கூடங்குளம் அணு மின் நிலையத்தை விஞ்ஞானிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai