சுடச்சுட

    

    கூடங்குளம் அணு மின் நிலையத்தை பார்வையிட்ட வெளிநாட்டு விஞ்ஞானிகள்

    By dn  |   Published on : 13th December 2013 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணுசக்தி கட்டுப்பாட்டு (ஒழுங்குமுறை) வாரியம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளின் விஞ்ஞானிகள் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், முதலாவது உலையில் கடந்த அக். 22-ல் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் அதிகபட்சமாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து மத்தியத் தொகுப்பில் இணைக்கப்பட்டது.

    பின்னர், ஆய்வுக்காகவும் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் ஜெனரேட்டர் அடிக்கடி நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. கடைசியாக பராமரிப்புப் பணிகளுக்குப் பின்பு கடந்த 10-ம் தேதி முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    சர்வதேச கருத்தரங்கு: இந்நிலையில், அணுசக்தி தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வி.வி.இ.ஆர். (நீர்-நீர்-ஆற்றல் அணுஉலை அல்லது அழுத்தநீர் அணுஉலை) முறையில் அணு மின் உற்பத்தி நடைபெறும் ரஷியா, செக்-குடியரசு, உக்ரைன், பல்கேரியா, அர்மேனியா, பின்லாந்து, ஜெர்மனி நாடுகளின் விஞ்ஞானிகள் இக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.

    வி.வி.இ.ஆர். முறையில் இதுவரை 440 மெகாவாட் முதல் 1,200 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மின்உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வழிகள், அணு உலைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகள் தங்கள் கருத்துகளை இக் கருத்தரங்கில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. கருத்தரங்கு வெள்ளிக்கிழமை வரை (டிச. 13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூடங்குளத்தில் ஆய்வு: இதனிடையே, அணுசக்திக் கட்டுப்பாடு (ஒழுங்குமுறை) வாரியம் (ஹற்ர்ம்ண்ஸ்ரீ ங்ய்ங்ழ்ஞ்ஹ் ழ்ங்ஞ்ன்ப்ஹற்ர்ழ்ஹ் க்ஷர்ஹழ்க்) தலைவர் எஸ்.எஸ். பஜாஜ், துணைத் தலைவர் எஸ். துரைசாமி தலைமையில் வெளிநாட்டு விஞ்ஞானிகள் 14 பேர் உள்பட மொத்தம் 24 பேர் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் வந்தனர்.

    வெளிநாட்டினருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் விஞ்ஞானி சுந்தர், மேலாளர் அன்புமணி உள்ளிட்டோரும் வரவேற்றனர். விஞ்ஞானிகள் குழுவினர், அணுமின் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.

    பின்னர், கூடங்குளம் அணு மின் நிலையத்தை விஞ்ஞானிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 2 மணி நேரம் அணு மின் நிலைய வளாகத்தில் இருந்த அவர்கள் பலத்த பாதுகாப்புடன் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றதாக அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai