சுடச்சுட

  

  சத்துணவு அமைப்பாளர் பணியிலிருந்து தாற்காலிக பட்டதாரி  ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரப் பணி

  By dn  |   Published on : 13th December 2013 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்துணவு அமைப்பாளர் பணியிலிருந்து, பள்ளிகளில் தாற்காலிக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை, முறைப்படுத்தி பணி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

  பள்ளிகளில் சத்துணவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வந்தவர்கள் (பி.எட்., முடித்தவர்கள்), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற சிறப்புத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையின் கீழுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தாற்காலிக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக 2011-12ல் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை முறையான நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தாற்காலிக பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர்கள் அனைவரையும், அவர்கள் பணியில் சேர்ந்த தேதி முதல் முறையான நியமனமாக மாற்றி உரிய விவரங்களை அவர்களின் பணிப் பதிவேட்டிலும் பதிவு செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai