சுடச்சுட

  

  திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த காவலாளி மாயமானார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

  திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (42). காவலாளி. இவர், தனது உறவினர் ஒருவரின் விசேஷத்தில் வியாழக்கிழமை பங்கேற்று விட்டு வண்ணார்பேட்டை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அவரது உடைகள் ஆற்றின் கரையோரம் கிடந்த நிலையில், சுப்பிரமணியனைக் காணவில்லையாம். அவர், நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கித் தேடினர். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வெட்டும்பெருமாள் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

  வியாழக்கிழமை மாலை வரை அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இருள் சூழ்ந்ததால் மீட்புப்பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் சடலத்தைத் தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு நிலைய வீரர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai