சுடச்சுட

  

  அம்பாசமுத்திரத்தில் திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

  அம்பாசமுத்திரம், ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரேவதி (25). அதே ஊரைச் சேர்ந்த அவரது மாமா முருகன் மகன் சங்கர் (27). இருவரும் ஓராண்டாக காதலித்து வந்ததாகவும், இதில் ரேவதி கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்துக்கு சங்கர் மறுத்ததுடன், ரேவதிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ரேவதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில் சங்கர் மீது இன்ஸ்பெக்டர் செர்பின் லதா வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai