சுடச்சுட

  

  நான்குனேரி அருகே மொபட் மீது ஐயப்ப பக்தர்கள் வாகனம் மோதி தம்பதி சாவு

  By dn  |   Published on : 13th December 2013 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நான்குனேரி புறவழிச் சாலையில் மொபட் மீது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் வியாழக்கிழமை மோதியதில், மொபட்டில் வந்த கணவன், மனைவி உயிரிழந்தனர்.

  நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணையா என்ற சுடலைக்கண்ணு (60). விவசாயி. இவரது மனைவி சண்முகத்தாய் (50). இருவரும் உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மொபட்டில் சென்றனர்.

  மொபட், நம்பி நகர் தனியார் நூற்பாலை அருகே புறவழிச் சாலையைக் கடக்க முயன்றபோது கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்குச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் கார் மொபட் மீது திடீரென மோதியது. இதில் மொபட்டில் சென்ற தம்பதி தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக நான்குனேரி காவல் ஆய்வாளர் சுந்தரநேசன் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநரான ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் அத்தங்கியைச் சேர்ந்த ஹனுமந்தராவ் மகன் திருப்பதிசுவாமுலுவை (35) கைது செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai