சுடச்சுட

    

    திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

    வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் காலை 7 மணி வரை பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டதால் வாகனஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பின்பு பனிப்பொழிவு தொடங்கியது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் மழை கொட்ட தொடங்கியது. வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai