சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில அரசு வழங்குவதைப்போல மத்திய அரசும் வழக்குரைஞர்களுக்கு சேமநல நிதியாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு அவரவர் பணி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சேர்ந்த இளம் வழக்குரைஞர்களுக்கு ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் உதவித்தொகை வழங்குவதுடன், வழக்குரைஞர் அலுவலகம் அமைக்கவும் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் ராஜசேகர், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பழனி, மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai