சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் மாமன்ற உறுப்பினர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    பாளையங்கோட்டை தியாகராஜநகர் 3-ஆவது நடுத்தெடுவைச் சேர்ந்தவர் எம். பெர்க்மான்ஸ் பாஸ்கர் (48). இவர், திருநெல்வேலி மாநகராட்சி 19-ஆவது வார்டு (தி.மு.க.) உறுப்பினர். அதே பகுதியில் உள்ள 3-ஆவது நடுத்தெருவைச் சேர்ந்தவர் வாகை கணேசன் (52). காங்கிரஸ் பிரமுகர். ப்ளோ கன்ட்ரோல் வால்வு பொருத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதில் ஒருவரையொருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai