சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் சனிக்கிழமை (டிச. 14) அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

  இதுதொடர்பாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநகர் மாவட்டச் செயலர் மு. ஹரிஹர சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நேருஜி சிறுவர் கலையரங்கில், சனிக்கிழமை (டிச. 14) மாலை 3 மணிக்கு அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

  மாநிலச் செயலர் குமார் எம்.பி., அமைச்சர் செந்தூர்பாண்டியன், பி.எச். பாண்டியன், பி.எம்.பி. மனோஜ்பாண்டியன் எம்.பி., வாரியத் தலைவர் முருகையாபாண்டியன், மாநகர் மாவட்டச் செயலர் முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் பேசுகின்றனர். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai