சுடச்சுட

    

    புளியங்குடி லாரி அதிபரிடம் ரூ. 3 லட்சம் தங்கக்காசு மோசடி

    By dn  |   Published on : 13th December 2013 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த லாரி அதிபரிடம் போலி தங்கக்காசுகளைக் கொடுத்து மோசடி செய்த கும்பல், வேறு யாரையும் ஏமாற்றியுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    புளியங்குடி அருகேயுள்ள சிங்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (41). லாரி அதிபர். இவர், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனுவில், அக்டோபர் 8-ம் தேதி தென்காசி பஸ் நிலையத்தில் ரமேஷ் என்பவரிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு தங்கக் காசுகளை வாங்கினேன். ஒரு துணியில் சுற்றித் தந்த காசுகளை, மறைவாக வீட்டிற்கு கொண்டுச் செல்லும்படி அறிவுறுத்தியதால் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன். சில நாள்கள் கழித்து பார்த்தபோது அந்த தங்கக்காசுகள் போலி என்பது தெரியவந்தது. ஆனால், என்னிடம் அதை வழங்கிய நபரின் செல்போன் எண்ணைத் தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை.

    இந்நிலையில் என்னிடம் தங்கக்காசு வழங்கிய ரமேஷை, வேலூர் அருகே காட்பாடியில் போலீஸார் கைது செய்துள்ளதாகவும், அவர் தங்கக்காசு மோசடி கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் பத்திரிகைகள் மூலம் தெரிந்துகொண்டேன். எனவே, இது குறித்து விசாரித்து ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மோசடி கும்பல் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai