சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்கநகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  பாளையங்கோட்டை மகாராஜநகரைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து 8 பவுன் தங்கநகையை புதன்கிழமை எடுத்தாராம். அதன்பின்பு அந்த நகையை பைக்கின் பெட்டியில் வைத்துவிட்டு, மகாராஜநகர் உழவர்சந்தையில் காய்கனிகள் வாங்கச் சென்றாராம். வீட்டிற்கு சென்று பார்த்தபோது பைக்கின் பெட்டியில் வைத்த நகை திருடுபோனது தெரியவந்ததாம். இது குறித்து சங்கரலிங்கம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai