சுடச்சுட

    

    போக்குவரத்துக்கு இடையூறு: கால்நடைகள் திரிவதற்கு தடை

    By dn  |   Published on : 13th December 2013 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் பேரூராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஏற்கெனவே தடைவிதித்துள்ளது.

    இந்நிலையில் இந்த உத்தரவை தீவிரப்படுத்தும் விதமாக பேரூராட்சி சார்பில் நகரைச் சுற்றிலும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை உரிமையாளர்கள் உடனடியாக தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இம்மாதம் 11-ம் தேதிக்குப் பின் சுற்றித்திரியும் மாடுகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு அரசு கால்நடைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும் என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai