சுடச்சுட

  

  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் பசுமை வகுப்பறைகள்

  By dn  |   Published on : 13th December 2013 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும் பசுமை வகுப்பைறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என, துணைவேந்தர் ஆ.கு. குமரகுரு தெரிவித்தார்.

  பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியது: 11-வது திட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவானது, இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து ரூ. 6,776 கோடி வழங்கியுள்ளது. ஆனால், இதில் பெரும்பகுதியாக ரூ. 5,600 கோடியை மத்திய பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் வழங்கிவிடுகிறது.

  மத்திய பல்கலைக்கழகங்கள் 6 சதவீத மாணவர்களை தயார்படுத்துகின்றன. ஆனால், மானியம் அதிகம் பெறுகிறது. 94 சதவீத மாணவர்களை தயார்படுத்தும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு 17.3 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படுகிறது.

  மேலும், உயர்கல்வி புத்தகம், ஆசிரியர் சார்ந்த கல்வி முறையாக மட்டும் இல்லாமல் அறிவுசார்ந்த கல்வியாக மாறி வருகிறது. எனவே, உயர்கல்வியைத் தரமாகவும், சிறப்பாகவும் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

  தேசிய கல்வித் தரம் என்பதற்கு பதிலாக சர்வதேச கல்வித் தரத்துக்கு கல்வி முறை உயர்ந்து வருகிறது. எனவேதான், தமிழக அரசு உயர்கல்வியை பலப்படுத்தவும், தரமானதாக மாற்றவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொருளாதார வளர்ச்சி, சமூகம் சார்ந்த நோக்கங்களைக் கொள்கைகளாகக் கொண்டு உயர்கல்வியை தமிழக அரசு கட்டமைத்து வருகிறது.

  தமிழக அரசின் 2023 தொலைநோக்குத் திட்டத்தில் உயர்கல்வி மேம்பாடு தொடர்பாக சிறப்புக் கூறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.

  பாடத் திட்டத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல சிறப்புக் குழு, சர்வதேச பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர்கள் வரவழைத்து மாணவர்களுக்கு பயன் அளிப்பது, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருதல் ஆகிய பணிகளும் நடைபெறுகின்றன. இதுமட்டுமன்றி, விடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய நவீன வகுப்பறைகள் ஏற்படுபடுத்தப்பட்டுள்ளன.

  சூரிய சக்தியைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளும் பசுமை வகுப்பறைகளாக மாற்றப்படும். இதன் முதல்கட்டமாக நிர்வாக அலுவலகக் கட்டடம் சூரிய சக்தி கட்டுப்பாட்டில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  அனைத்துத் துறைகளிலும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும். பல்கலைக்கழக வளாகத்தில் தரமான சாலைகள் அமைக்கப்படும். மாணவர்-மாணவிகளுக்கு போதிய வசதிகள் செய்துதரப்படும். புல்வெளிகள் அமைத்து கூடுதலாக மரக்கன்றுகள் நடப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai