சுடச்சுட

  

  திருநெல்வேலி ரயில் நிலையத்தின் 1-ஆவது நடைமேடையில், ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆந்திரத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, கூடுதல் பாதுகாப்பு வழங்க ரயில்வே துறையைக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம்.யூ. உதவிக் கோட்டத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். துணைச் செயலர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் பழனி, காஜாமைதீன், தமிழரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai