Enable Javscript for better performance
வாகனம் மோதி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாகனம் மோதி தொழிலாளி சாவு

    By dn  |   Published on : 13th December 2013 06:06 AM  |   அ+அ அ-   |    |  

    எட்டயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தார்.

    எட்டயபுரம் அருகே வெம்பூர் ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் முத்துவேலு (58). கூலித் தொழிலாளியான இவர், புதன்கிழமை மேலக்கரந்தையிலிருந்து வெம்பூருக்கு மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முத்துவேலு பலத்த காயமடைந்தார். மாசார்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் முத்துவேலுவை அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துவேலு இறந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai