சுடச்சுட

  

  :திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வண்ண மீன்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

  இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர் ரமேஷ் கூறியதாவது: ஐடியல் ஹோம் கிரியேட்டர்ஸ் சார்பில் நடத்தப்படும் இக்கண்காட்சி கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டி.வி., மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் இக் கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பர்னிச்சர் வகைகள், அழகுசாதனப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன.

  மனிதர்களுக்கு மசாஜ் செய்யும் மற்றும் மனிதர்களைக் கொல்லும் அதிசய மீன்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இம் மாதம் 16-ஆம் தேதி வரை தினமும் மாலை 3.30 முதல் இரவு 9.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெற உள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai