சுடச்சுட

  

  திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் சனிக்கிழமை முதல் மின்சிக்கன வார விழா நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அ.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

  இதுதொடர்பாக, அவர் கூறியது: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில்,  மாநிலம் முழுவதும் டிச.14 ஆம் தேதி முதல் டிச.20 ஆம் தேதி வரை மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

  மின்சார சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெறும் இந்த வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும். இதேபோல, இந்தாண்டு சனிக்கிழமை (டிச.14) தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை மின்சிக்கன வார விழா நடைபெறுகிறது.

  இதன்படி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் உள்ள கோட்ட அலுவலகங்கள், உபகோட்ட அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்களில் ஒரு வாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மின் சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகமும் நடைபெறும்.

  இதுமட்டுமல்லாது பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்படும். அந்தந்தப் பிரிவு அலுவலகங்கள் மூலம் பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்கும் ஊர்வலமும் நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai