சுடச்சுட

  

  இளைஞர் மீது  தாக்குதல்: இருவர் மீது வழக்கு

  By திருநெல்வேலி  |   Published on : 14th December 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி சந்திப்பில், இளைஞர் ஒருவரைத் தாக்கியதாக 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  திருநெல்வேலி சந்திப்பு பெருமாள் தெற்கு ரதவீதியைச் சேர்ந்த கணேசன் மகன் இசக்கிராஜா (27). இவரை கைலாசபுரத்தைச் சேர்ந்த கண்ணன், மகாராஜன் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  நினைவு ஸ்தூபி அவமதிப்பு: தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டியில் இருந்து வாகைகுளம் செல்லும் வழியில் தேவர் நினைவு ஸ்தூபி உள்ளது. இதில் சிலர் அவமதிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும் அப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலையில் திரண்டனர்.  மாநகர காவல் உதவி ஆணையர் லோகநாதன், தச்சநல்லூர் ஆய்வாளர் சோனமுத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai