Enable Javscript for better performance
இஸ்கான் கோயிலில் பகவத்கீதைக்கு சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    இஸ்கான் கோயிலில் பகவத்கீதைக்கு சிறப்பு பூஜை

    By திருநெல்வேலி,  |   Published on : 14th December 2013 02:34 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் பகவத்கீதைக்கு சிறப்பு அலங்காரம் செய்து விஷேச பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    வேதஞானத்தின் மகுடமாக திகழும் பகவத்கீதை பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பகவத்கீதையின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் இஸ்கான் இந்நிகழ்ச்சியை அனைத்து இடங்களிலும் நடத்தி வருகிறது.

    திருநெல்வேலி வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் இதையொட்டி பகவத்கீதை பாராயணத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலையில் சுவாமி சன்னிதியில் பகவத்கீதைக்கு சிறப்பு அலங்காரம் செய்து விஷேச பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கீதையை உபதேசித்த ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரமும், கீதைக்கு உண்மையுருவில் உரை எழுதி உலகெங்கும் பறைசாற்றிய இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீலபிரபுபாதாவிற்கு குரு பூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பகவத்கீதை, பகவத்கீதை விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai