சுடச்சுட

  

  திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் மதரஸா இஸ்லாமிய தொடக்கப் பள்ளியில் குடிநீர்த் திட்டம், நவீன கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்தில் நடைபெறும் இப்பணியை டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஜமாத் செயலர் எம்.ஏ. வரிசைமுகைதீன் தலைமை வகித்தார். ஜமாத் தலைவர் ஏ.ஆர்.எம். நியமத்துல்லா முன்னிலை வகித்தார். பொருளாளர் பி. முகம்மதுஇப்ராஹீம் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் பி.எஸ். காதர்மஸ்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எல்.கே.எஸ். மீரான்முகைதீன், தேசிய லீக் மாவட்டச் செயலர் எம்.ஏ. நசீர்அகம்மது, ஒலிம்பிக் சிராஜ்தீன், எம்.ஏ. அப்துல்ஹமீது, மேலாளர் கமாலுதீன், அப்துல்சமது, ஜெயினுதீன், கே.எஸ். செய்யதுமைதீன், எம்.ஏ. கரீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai