சுடச்சுட

  

  சுந்தரனார் பல்கலை.யில் பாரதியார், பாரதிதாசன் விநாடி-வினா போட்டி

  By திருநெல்வேலி  |   Published on : 14th December 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் அறக்கட்டைளை சார்பில் விநாடி-வினா போட்டிகள் நடைபெறுகின்றன.

  இதுதொடர்பாக, பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் அ.ராமசாமி கூறியது: மனோன்ணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள பாரதியார் மற்றும் பாரதிதாசன் அறக்கட்டளை நிகழ்வுகள், இந்தாண்டு (2013-14) விநாடி-வினா போட்டிகளாக நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 2 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த மாணவர்களுக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்த எழுத்துத் தேர்விலிருந்து தேர்வு செய்யப்படும் 5 கல்லூரிகளுக்கு நேர்முக நிலை விநாடி-வினா போட்டிகள் நடைபெறும்.

  இதில் 3 கல்லூரிகளைத் தேர்வு செய்து முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.1,500, மூன்றாம் பரிசு ரூ.1,000 வழங்கப்படும். எனவே, பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அந்தந்த துறையின் தலைவர்கள், முதல்வர் பரிந்துரை செய்து உரிய அடையாள அட்டையுடன் பங்கேற்க அனுப்ப வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இருவர் மட்டும் அனுப்பலாம்.

  வரும் 23 ஆம் தேதி (திங்கள்கிழமை) பல்கலைக்கழக தமிழியல் துறை வளாகத்தில் போட்டிகள் நடைபெறும். காலை 10 மணி முதல் 11 மணி வரை பெயர்கள் பதிவு செய்யப்படும். 11 முதல் 12 மண வரை எழுத்துத் தேர்வு நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு விநாடி-வினா நடைபெறும். பாரதி, பாரதிதாசன் ஆகியோரது புகழ்பெற்ற கவிதைகள், பாரதியார், பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, தமிழ்ச் சமூகத்தில் இவர்களது தாக்கம் ஆகியவை தொடர்பாக வினாக்கள் இடம்பெறும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai