சுடச்சுட

  

  திருநெல்வேலி நகரில் சைவ சித்தாந்த பயிற்சி 9-வது தொகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.

  திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த சைவ திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் சார்பில் 9-வது தொகுப்பு பயிற்சி 24 மாதங்கள் நடைபெற்றன. இப்பயிற்சியில் 91 பேர் பயிற்சி பெற்றனர். இதில் 60 பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து திருநெல்வேலி நகரில் ஜவுளி மகமை சங்கக் கட்டடத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

  ஜவுளி வியாபாரிகள் சங்கச் செயலர் வெ. வெங்கடாசலம் தலைமை வகித்தார். பொ. சுப்பிரமணியன் திருமுறை விண்ணப்பம் செய்தார். மெ. அறிவழகன் வரவேற்றார். விழாவில் மாணவர்கள் காஞ்சனா, கற்பகம், முத்துக்குமாரசாமி, கிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அனுபவம் குறித்துப் பேசினர்.

  தேர்வில் முதல், 2-வது இடம்பெற்ற மாணவர்களுக்கு இ. ஆண்டபெருமாள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். டி.எஸ். சிதம்பரம் மகேஸ்வர பூஜை நடத்தினார். அமைப்பாளர் கு. முத்துசாமி பேசினார். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அசுவதி குருபூஜை நடைபெறும் நாளில் "சித்தாந்த ரத்னம்'என்ற பட்டம் வழங்கப்படும். 10- வது தொகுப்புக்கான (2014-15) மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அமைப்பாளர் கு. முத்துசாமியை 94434 39010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai