சுடச்சுட

    

    தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய காவலாளியின் சடலம் மீட்பு

    By திருநெல்வேலி  |   Published on : 14th December 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வண்ணார்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை மூழ்கிய காவலாளியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

    வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (42). பரணி நகரில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வியாழக்கிழமை தாமிரவருணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கினார்.

    தகவலறிந்ததும் பாளை. தீயணைப்பு வீரர்கள் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை மாலை வரை அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் தீயணைப்பு வீரர்கள், சுப்பிரமணியனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai