சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் பேராசிரியர் இரா. மோகன் எழுதிய புலமை நலம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

  மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர் இரா. மோகன் எழுதிய இந்நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டை மாநில தமிழ்ச சங்கத்தில் உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவர் பா. வளன்அரசு தலைமையில் நடைபெற்றது.

  பத்திரப்பதிவுத் துறை முன்னாள் மாவட்ட பதிவாளர் உ. சிதம்பரபாண்டியன் நூலை வெளியிட்டார். கணேசன் முதல் பிரதிநிதியைப் பெற்றுக் கொண்டார். நூல் குறித்து வளன்அரசு பேசினார். புலவர் வீ. செந்தில்நாயகம், த.மு.சா. காஜாமைதீன் ஆகியோர் பாராட்டி பேசினார். முன்னாள் மாவட்டப் பதிவாளர் அ. ராஜகிளி இறைவணக்கம் பாடினார். முன்னாள் மாவட்ட பதிவாளர் ராஜகோபால் வரவேற்றார். இரா. முருகன் நன்றி கூறினார். 

  மன்றக் கூட்டம்: பாளையங்கோட்டை கட்டபொம்மன் நகரில் விவேகானந்தர் மன்ற சிறப்புக் கூட்டம் பா. வளன்அரசு தலைமையில் நடைபெற்றது. ராமர் வரவேற்றார். புலவர் வீ. செந்தில்நாயகம், செல்வி ஆருத்ரா, செல்வி வைசாலி, கு. சடகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தையொட்டி பள்ளிகளில் விவேகானந்தர் கருத்துக்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தங்கராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai