சுடச்சுட

  

  நெல்லையில் கண்ணாடி இழை வழி இன்டர்நெட் சேவை அறிமுகம்

  By திருநெல்வேலி,  |   Published on : 14th December 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகரில் கண்ணாடி இழை வழியிலான இன்டர்நெட் சேவையை (எப்டிடிஹெச்) பிஎஸ்என்எல் நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

  இந்த எப்டிடிஹெச் சேவை என்பது தனித்துவம் மிகுந்த நவீன தொழில்நுட்பமாகும். இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் இதை முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் 256 கேபிபிஎஸ் முதல் 100 எம்பிபிஸ் வரையிலான அதி வேக இன்டர்நெட் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். வீடுகளுக்கு மட்டுமன்றி அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தரைவழி இன்டர்நெட் இணைப்பு வழங்க இயலாத தொலைதூரப் பகுதிகளுக்கும் எளிதில் விரைந்து இணைப்பு வழங்க முடியும்.

  இந்த வசதியைப் பெற இணைப்பு மற்றும் பொருத்துக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பாதுகாப்பு முதலீடாக ரூ. ஆயிரம் செலுத்த வேண்டும். மாதந்தோறும் இயந்திரத்துக்கு ரூ.100 செலுத்த வேண்டும். இவைத் தவிர அவரவர் விரும்பும் திட்டங்களில் சேர்ந்து அதற்கான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

  இந்த சேவையை  பிஎஸ்என்எல் நிறுவன தலைமைப் பொது மேலாளர் முகமது அஸ்ரஃப் கான் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார். முதல் நாளில் 11 பேருக்கு இந்த சேவை மூலம் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பெற்றனர். இதன் அறிமுக நிகழ்ச்சியில், பொது மேலாளர் பி. முருகானந்தம், துணைப் பொது மேலாளர்கள் ஜெயபால், ராஜாமணி, பன்னீர்செல்வம் அந்தோணிசாமி, ராஜேஸ்வரி, கோட்டப் பொறியாளர் கான்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக திருவேங்கடத்தில் உள்ள தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி கட்டணம் பெறும் வசதியையும் முகமது அஸ்ரஃப் கான் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai