Enable Javscript for better performance
நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

    By திருநெல்வேலி,  |   Published on : 14th December 2013 02:29 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வெள்ளிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு 2 மணி நேரம்  தாமதமாக வந்தன.

    "மாதி' புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே, திருச்சி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டது. பின்னர், விரிசல் சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில்  போக்குவரத்து சீரானது.

    இதனால் நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருநெல்வேலிக்கு தாமதமாக வந்தன. காலை 8.40 மணிக்கு வரவேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 11.15 மணிக்கும், காலை 8.20 மணிக்கு வர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 9.45 மணிக்கும் திருநெல்வேலிக்கு வந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai