சுடச்சுட

  

  திருநெல்வேலி நகரம் கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

  மகாகவி பாரதியார் வாசகர் வட்டம், உரத்த சிந்தனை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மீனாட்சிநடராஜன் தலைமை வகித்தார். கே. சந்திரபாபு முன்னிலை வகித்தார். பொருனைபாலு வரவேற்றார். லட்சுமிப்ரியா இறைவணக்கம் பாடினார்.

  சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். தாமிரவருணி இலக்கிய மாமன்றம் சார்பில் கவிஞர் செய்த்தலை மணியன், கவிஞர் பாமணி பாரதியார் குறித்து பேசினர். வாசகர் வட்டத் தலைவர் வை. சிவசங்கரன், தியாகராஜன், பாளை வெங்கட் மற்றும் வாசகர்கள் கலந்துகொண்டனர். நூலகர் கண்ணம்மா நன்றி கூறினார்.

  கருத்தரங்கு: பாளையங்கோட்டையில், பாரதியார் பிறந்த தினத்தையொட்டி கருத்தரங்கு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு பா. வளன்அரசு தலைமை வகித்தார். வை. ராமசாமி வரவேற்றார். பதிவுத்துறை முன்னாள் மாவட்ட பதிவாளர் உ. சிதம்பரபாண்டியன் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசினார்.

  பாரதியின் நாட்டுணர்வு என்ற தலைப்பில் முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் அ. ராஜகிளி, பாரதியின் பெண்ணியம் என்ற தலைப்பில் ந. உஷாதேவி, பாரதியின் இசைப்பற்று என்ற தலைப்பில் வீ. செந்தில்நாயகம், பாரதியின் கற்பூரச் சொற்கள் என்ற தலைப்பில் த.மு.சா. காஜாமைதீன் ஆகியோர் பேசினர்.

  திருக்குறள் முற்றோதல் செய்த 8 வயது சிறுமி செல்வப்பிரியாவுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஐயாதுரை, அருணாசிவாஜி, கர்னல் ஜானகிராமன், முன்னாள் பதிவாளர் கிருபாகரன், செ. திவான், பாலகிருஷ்ணன், சுந்தரம், ஆய்வு மாணவி கலைச்செல்வி, முன்னாள் கல்வி அலுவலர் கோமதிநாயகம், கவிஞர் சு. பாண்டியன், வழக்குரைஞர் மு.பா. முருகன், சமூக சேவகர் முத்துகுமாரசாமி, காவல்துறை தடயவியல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai