சுடச்சுட

  

  பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் சிலர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

  பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியாக உணவு தயாரித்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டிருந்ததாம்.

  இந்நிலையில், தனியாக உணவு தயாரிக்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அந்தக் கைதிகள் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் மதிய உணவு சாப்பிட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai