Enable Javscript for better performance
ரெட்டியார்பட்டி அருகே விபத்து: கோவை பிளாஸ்டிக் வியாபாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    ரெட்டியார்பட்டி அருகே விபத்து: கோவை பிளாஸ்டிக் வியாபாரி சாவு

    By திருநெல்வேலி,  |   Published on : 14th December 2013 02:33 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி அருகேயுள்ள ரெட்டியார்பட்டியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில், கோவையைச் சேர்ந்த வியாபாரி இறந்தார்.

    கோவை அருகே உள்ள மணிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (50). பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த வியாபாரியான இவர், தனது மனைவியுடன் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாராம்.

    பின்னர் இத்தம்பதி பைக்கில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் நான்குவழிச் சாலையில் வியாழக்கிழமை சென்றபோது சாலையின் தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலையை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். அவரது மனைவி லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார். இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    தொழிலாளி தற்கொலை: பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த ராயப்பன் மகன் சண்முகம் (58). கூலித் தொழிலாளியான இவர், வியாழக்கிழமை விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    kattana sevai