சுடச்சுட

  

  10 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்த தரைவழி தொலைபேசி இணைப்புகள்

  By திருநெல்வேலி  |   Published on : 14th December 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனக் கட்டுப்பாட்டில் இருந்த தரைவழி தொலைபேசி இணைப்புகள், 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துவிட்டதாக பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் முகமது அஸ்ரஃப் கான் தெரிவித்தார்.

  திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  சென்னை நீங்கலாக தமிழக பிஎஸ்என்எல் கோட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவன வளர்ச்சியானது தனியார் நிறுவனத்தை விஞ்சும் வகையில் அமைந்துள்ளது. நிறுவன லாபமானது 5 சதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ரூ.2 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய், இந்தாண்டு ரூ.2,050 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் இது மேலும் உயரக் கூடும்.

  சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள அனைத்து நவீன வசதிகளையும் திருநெல்வேலி கோட்டத்திலும் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தவுள்ளன. முதல்கட்டமாக கண்ணாடி இழை வழி இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த சேவை மூலம் இணையதளத்தில் பதவிறக்கம், பதிவேற்றம் அதி விரைவாகச் செய்ய முடியும். முதல்கட்டமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  தொடர்ந்து அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். 3ஜி சேவையைத் தொடர்ந்து அடுத்த தலைமுறையினருக்கான அதிநவீன இன்டர்நெட் சேவை எனும் என்ஜிஎன் சேவையை பெருநகரங்களுக்கு இணையாக திருநெல்வேலியில் அறிமுகம் செய்யப்படும். இன்னும் 3 மாதங்களில் என்ஜிஎன் சேவையை திருநெல்வேலி வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் தரைவழித்தட தொலைபேசி இணைப்புகளின் மீதான மோகம் குறைந்துவிட்டது. கடந்த 2004-ல் 30 லட்சம் இணைப்புகள் இருந்தன. இப்போது, 15 லட்சம் இணைப்புகள்தான் உள்ளன. செல்போன் பயன்பாடு அதிகரித்திருப் பதாலேயே தரைவழித் தட இணைப்புகளை சரண்டர் செய்துவிடுகின்றனர்.

  திருநெல்வேலியில் மட்டும் பிற தனியார் செல்போன் நிறுவனங்களிடம் இருந்த வாடிக்கையாளர்கள் 20 ஆயிரம் பேர் அதே எண்ணுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறியுள்ளனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai