Enable Javscript for better performance
எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா- Dinamani

சுடச்சுட

    

    எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

    By திருநெல்வேலி,  |   Published on : 15th December 2013 02:55 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    கல்லூரி நிர்வாகம், தூய சவேரியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தின.

    விழாவுக்கு, ஸ்காட் குழுமங்களின் தலைவர் கிளிட்டஸ்பாபு தலைமை வகித்து, மாணவர், மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துப் பேசினர்.

    அருள்தந்தையர் ஜே. ஜேசுதாஸ், எஸ்.கே. இக்னாசி ஆகியோர் கிறிஸ்துமஸ் சிறப்பு நற்செய்தி வழங்கினர். நூரூல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.பெருமாள்சாமி, ஸ்காட் குழுமங்களின் துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ்பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பேசினர்.

    விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில்களும், இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் காட்சிப் பொருள்களும், வண்ண, வண்ண ஸ்டார்களும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், கல்லூரி, பள்ளி மாணவர், மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இயேசு பிறப்பை எடுத்துக் கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய நடனமும் இடம்பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கே. ராஜகோபால், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மெனன்டஸ் உள்ளிட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    kattana sevai