சுடச்சுட

  

  "தமிழக அரசின் திட்டங்கள்தான் இந்தியாவுக்கே வழிகாட்டி'

  By திருநெல்வேலி,  |   Published on : 15th December 2013 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசின் திட்டங்கள்தான் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளன என அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலர் ப. குமார் எம்.பி. கூறினார்.

  பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மாநகர் மாவட்ட  இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

  முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் உள்ளன.

  ஜெயலலிதாவை பிரதமர் ஆக்கிட அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் பாசறையினர் இன்றே பணியைத் தொடங்க வேண்டும் என்றார் அவர்.

  கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர் பி.எச். பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன், மாநில வழக்குரைஞர் அணிச் செயலர் பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.பி., மாநில வீட்டுவசதி வாரியத் தலைவரும், புறநகர் மாவட்டச் செயலருமான ஆர். முருகையாபாண்டியன், மாநகர் மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன் ஆகியோர் பேசினர்.

  மேயர் விஜிலா சத்தியானந்த், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எஸ்.  முத்துசெல்வி, எஸ். துரையப்பா, பாசறையின் மாநில இணைச் செயலர்கள் என். சின்னத்துரை, ஆர்.எஸ். முத்துசாமி, மனோகரன், துணைச் செயலர்கள் பழனிவேல், விஷ்ணுபிரபு, கே. கவிதா, துணை மேயர் பூ. ஜெகநாதன், பாசறையின் மாவட்ட நிர்வாகிகள் எஸ். ஆறுமுகம் கார்த்திக், பி. கல்யாணசுந்தரம், ஆர். விஜயலட்சுமி, கே. ராஜேஸ்வரன், வி. தேன்மொழி, கே. மாரிச்சாமி, வீரம்மாள்குட்டிவினிதா, பி. அரவிந்த், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் வேலாயுதம், அவைத் தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறைச் செயலர் மு. ஹரிஹரசிவசங்கர் தொகுத்து வழங்கினார்.

  தீர்மானங்கள்: ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக இளைஞர் பாசறை வரும் மக்களவைத் தேர்தலில் பணி செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai