சுடச்சுட

  

  திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா

  By களக்காடு,  |   Published on : 15th December 2013 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கைசிக ஏகாசதி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் வைணவத் தலங்கள் 108-ல் ஒன்றாகும். இக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

  இந்த ஆண்டு இவ்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அழகியநம்பி சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.

  மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழகியநம்பி சுவாமிகள் கைசிக மண்டபத்திற்கு எழந்தருளினார். அங்கு கோயில் ஸ்தல புராணத்தை விளக்கும் வகையில் கைசிக நாடகம் நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இவ் விழாவில் ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai