சுடச்சுட

    

    அறிவியல், தொழில்நுட்பம்: சாதனையாளர்களுக்கு பி.எஸ்.என். விருது

    By திருநெல்வேலி,  |   Published on : 16th December 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறிவியல், பொறியியல் தொழில்நுட்பத்துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் விழா திடியூர் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

    பாளையங்கோட்டை அருகே திடியூரில் இயங்கி வரும் பி.எஸ்.என். கல்வி அறக்கட்டளை சார்பில் அறிவியல், தொழில்நுட்பத்துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

    2012-ம் ஆண்டில் பொறியியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய வேதியியல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர்  ஜி.டி. யாதவ், சுற்றுச்சூழல்துறையில்

    சிறந்து விளங்கிய தேசிய கடல் சார்ந்த கல்வி மைய இயக்குநர் நக்வி, அறிவியல்துறையில் சிறந்து விளங்கிய நானோ தொழில்நுட்ப மைய இயக்குநர் வி. ராஜேந்திரன் மற்றும் கிராமப்புற தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர மையம் ஆகியன விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.

    சனிக்கிழமை பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் சாதனையாளர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை பல்கலைக் கழக மானியக்குழு துணைத் தலைவர் தேவராஜன் வழங்கிப் பாராட்டினார். விருது பெற்ற சாதனையாளர்களை பி.எஸ்.என். கல்வி குழுமத் தலைவர் பி. சுயம்பு, அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கணேசன், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் டி.ஜெ. பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    கல்லூரி முதல்வர் வி. சதாசிவம் வரவேற்றார். கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் கொலம்பஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai