Enable Javscript for better performance
இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்: 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்: 5 பேர் கைது

    By திருநெல்வேலி  |   Published on : 16th December 2013 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி நகரத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கிராமத்தில் 7 தலைமுறைகளாக வசிக்கும் சிலரது இடத்தை கேரள அரசு கைப்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழர்களின் இடத்தை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கொள்கையை கடைப்பிடிக்க பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் வாழும் கேரளத்தினருக்கு ரோஜா பூ வழங்கும் போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

    இருப்பினும் இந்து மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாவட்டப் பொதுச் செயலர் எஸ்.எஸ்.எஸ்.மணி, மாவட்டத் தலைவர் எஸ்.உடையார், திருநெல்வேலி மண்டல பொதுச் செயலர் ராஜா உள்ளிட்டோர் திருநெல்வேலி நகரத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இப் போராட்டத்தில் பங்கேற்ற 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    kattana sevai