Enable Javscript for better performance
டக்கரம்மாள்புரத்தில் நூதன போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    டக்கரம்மாள்புரத்தில் நூதன போராட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 16th December 2013 02:59 AM  |   அ+அ அ-   |    |  

    பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் அடிபம்புக்கு மாலை அணிவித்து தே.மு.தி.க.வினர் நூதன போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

    திருநெல்வேலி மாநகராட்சி 27-வது வார்டுக்கு உள்பட்ட   டக்கரம்மாள்புரம் தெற்குத் தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த அடிபம்பு பழுதானது. 6 மாதங்களைக் கடந்தும் இந்த அடிபம்பு சரிசெய்யப்படவில்லையாம். மாநகராட்சி உறுப்பினர், அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பலனில்லையாம். இந்நிலையில், அந்த அடிபம்பை சரிசெய்யக் கோரி தே.மு.தி.க.வினர் நூதன போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். அடிபம்புக்கு மாலை அணிவித்து, அதன்முன்பு தேங்காய் உடைத்து, படையலிட்டனர்.

    இப் போராட்டத்துக்கு தே.மு.தி.க. 27-வது வார்டு செயலர் ஆர்.ஆர்.ஆர்.ராஜ் தலைமை வகித்தார். பெருமாள்புரம் பகுதி பொருளாளர் எஸ்.டி.செல்வம், வேதமுத்து, மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலர் வி.ஜெயந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அந்தோனிராஜ், பொன்துரை, பால்துரை, சாமுவேல், முத்துகுமார், ஜெயபிரகாஷ், எட்வின், ரூபன், தியாகு, பாண்டி, ஐயாத்துரை, பாக்கியராஜ், தங்கப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai