சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் மறைந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மலரஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநகரத் தலைவர் ம.சு. சுதர்சன் தலைமை வகித்தார். மாநகரச் செயலர் ஈ. தமிழீழன், தானித் தொழிற்சங்க நிர்வாகி அ. அகஸ்தின்பெர்னாண்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு, வழக்குரைஞர்கள் மன்ற பொருளாளர் வ. மணிகண்டன், உலகத் தமிழ்க் கழகம் சார்பில் வழக்குரைஞர் பொ. இளஞ்செழியன், இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்த அ. பீட்டர், தமிழர் தேசிய களம், மருத நிலக் கட்டடத் தொழிலாளர் சங்க நிர்வாகி அருள்பீட்டர்,

  வழக்குரைஞர் தௌ. அப்துல்ஜப்பார், பாட்டாளி இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த சு. மாரியப்பன், மதிமுகவைச் சேர்ந்த விஜயகுமார்பாக்கியம், ஆட்டோ சங்கத் தலைவர் அரவிந்த், சேவியர், சுடலையாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai