Enable Javscript for better performance
பேட்டையில் சித்த மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பேட்டையில் சித்த மருத்துவ முகாம்

    By திருநெல்வேலி  |   Published on : 16th December 2013 02:59 AM  |   அ+அ அ-   |    |  

    மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பேட்டையில் இலவச சித்த மருத்துவ முகாம், ரத்தப்பிரிவு கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ம.ம.மு.க. மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலர் பேட்டை மைதீன் தலைமை வகித்தார். மாநகர மருத்து சேவை அணிச் செயலர் முபாரக் அலி, அகமது பிலால், மதார்மைதீன், காசிம், முஸ்தபா, அபுபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல நிர்வாகி எஸ்.எம்.ரசூல்மைதீன், பேட்டை கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் டி.பி.எம்.முகம்மது ஷா, உலகத்தமிழ் மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த கு.சரவணன் ஆகியோர் பேசினர். இந்த முகாமில் 2000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோர் ரத்தப் பிரிவு கண்டறிந்தனர். மாவட்ட மருத்துவ சேவை அணி துணைச் செயலர் சண்முகம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai