Enable Javscript for better performance
வரதராஜ பெருமாள் கோயிலில் சுதர்ஸன ஜயந்தி சிறப்பு யாகம்- Dinamani

சுடச்சுட

    

    வரதராஜ பெருமாள் கோயிலில் சுதர்ஸன ஜயந்தி சிறப்பு யாகம்

    By திருநெல்வேலி,  |   Published on : 16th December 2013 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் சுதர்ஸன ஜயந்தி சிறப்பு யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜயந்தி நாளான ஞாயிற்றுக்கிழமை சுதர்ஸன ஜயந்தி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின்பு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    இதுகுறித்து வி.மாதவ பட்டாச்சாரியார் கூறியதாவது: மகாவிஷ்ணுவின் முதல் ஆயுதமாக சுதர்ஸன சக்கரம் விளங்குகிறது. சக்கரத்தாழ்வார் ஜயந்தி நாளில் சுதர்ஸன யாகம் செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.அதனுடன் நீண்ட நாள்களாக தடைப்பட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் இந்த யாகத்தினால் பங்கேற்று வழிபடுவதால் கூடிவரும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai