சுடச்சுட

    

    விளாத்திகுளம் அருகே தந்தை, மகள் வெட்டிக் கொலை: மூவர் கைது

    By விளாத்திகுளம்  |   Published on : 16th December 2013 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தந்தை-மகள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவரது மகள் ராமலட்சுமி (30). சில ஆண்டுகளுக்கு முன்னர் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் மிக்கேல்நகரில் குடியேறி வசித்து வந்தனர்.

    ராமலட்சுமி மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் திருமணம் ஆகவில்லை. அவர் தன்  தந்தை பெருமாளின் பாதுகாப்பில் இருந்து வந்தாராம். சனிக்கிழமை இரவு ராமலட்சுமியின் சகோதரி பாக்யலட்சுமியின் மகன் அதிசய பரலோக ராஜா (19) மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து பெருமாளின் வீட்டுக்குச் சென்று, தனிமையில் இருந்த ராமலட்சுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தனராம்.

    அப்போது ராமலட்சுமி கூச்சலிடவே, பெருமாள் வீட்டுக்குள் வந்தாராம். அப்போது  அதிசய பரலோக ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பெருமாளும், அவரது மகள் ராமலட்சுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து வேம்பார் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில்,  சூரங்குடி காவல் உதவி- ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரûணை நடத்தினர்.

    பின்னர், தப்பியோடிய அதிசய பரலோக ராஜா மற்றும் அவரது நண்பர்கள்  அந்தோனிராஜ், ஆரோக்கிய எட்வர்ட் கென்னடி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai