சுடச்சுட

  

  இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 17th December 2013 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் சார்பில், பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  கொளத்தூர் மணி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களின் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழின உணர்வாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாளையங்கோட்டை ஜவஹர் திடல் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். மதிமுக, மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம், எஸ்டிபிஐ, ஆதித் தமிழர் பேரவை, தமிழ் மாணவர் கூட்டமைப்பு, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ் சான்றோர் பேரவை, வழக்குரைஞர் தமிழ் மன்றம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்கம், தமிழர் தேசியக் களம், மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் களம், மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai