சுடச்சுட

  

  திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் 3 பேர் இறந்தனர். பெண் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

  கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (48). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (45).

  செய்துங்கநல்லூர் அருகே உள்ள தங்களது இடத்தை அளந்து வேலியிடுவதற்காக  திங்கள்கிழமை காலையில் காரில் முருகன், பேச்சியம்மாள் இருவரும் புறப்பட்டனர்.

  அவர்களுடன் அதே ஊரின் கீழத்தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் சின்னமாரி என்ற மாரிமுத்து (44), வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் பிச்சையா (37), பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் ராஜா (34), சுப்பையா மகன் செல்வம் (35), கண்ணையா மகன் சங்கரன் (42) ஆகியோரும் சென்றனர். கங்கைகொண்டானைச் சேர்ந்த முத்தையா மகன் சண்முகவேல் (25) காரை ஓட்டினார்.

  வடகரையில் இருந்து கங்கைகொண்டான் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த பெட்ரோல் பங்க் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னமாரி இறந்தார்.

  காயமடைந்த 7 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு முருகனும், சங்கரனும் இறந்தனர்.

  உயிரிழந்த சின்னமாரிக்கு லட்சுமி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும், சிவா என்ற மகளும் உள்ளனர். முருகனுக்கு நயினார் என்ற மகனும், பாப்பாத்தி என்ற மகளும் உள்ளனர்.

  விபத்து குறித்து கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சோனமுத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai