சுடச்சுட

  

  மக்கள் குறைதீர் கூட்டம்: பயனாளிக்கு  ரூ. 1 லட்சம் உதவித்தொகை

  By திருநெல்வேலி,  |   Published on : 17th December 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விபத்து நிவாரண உதவித் தொகையாக ரூ. 1 லட்சம் பயனாளிக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் ஆட்சியர் மு. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமா மகேஸ்வரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ருக்மணி, சிறப்புத் திட்ட செயலாக்க தனித்துணை ஆட்சியர் மேரிபாய், திருநெல்வேலி கோட்டாட்சியர் சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், வட்டாட்சியர் சேது மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  வேலைவாய்ப்பு, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாலை போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் பாளையங்கோட்டை வட்டம், உத்தமபாண்டியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணம்மாளுக்கு, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விபத்து நிவாரண உதவித்தொகையாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai