சுடச்சுட

  

  செப்பறை அழகியகூத்தர் கோயில் திருவாதிரைத் தேரோட்டம்

  By திருநெல்வேலி  |   Published on : 18th December 2013 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியை அடுத்த ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகியகூத்தர் கோயிலில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

  தாமிரவருணி நதியைத் தீர்த்தமாகக் கொண்டு, பஞ்ச சபைகளில் தாமிர சபையாக விளங்கும் இக் கோயில், உலகின் முதல் நடராஜமூர்த்தி கோயில் கொண்டுள்ள தலமாகக் கருதப்படுகிறது. இங்கு மஹாவிஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தி, வாமதேவரிஷி, மணப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக் காட்சி அளித்தது சிறப்புடையது.

  இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு அழகியகூத்த பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அதன்படி நிகழாண்டு விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  விழாவை முன்னிட்டு சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகியகூத்தர் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது.

  இதில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  தொடர்ந்து, புதன்கிழமை திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அதிகாலை 2 மணிக்கு மஹா அபிஷேகம், 5.30 மணிக்கு கோபூஜை, ஆருத்ரா தரிசனம், பிற்பகல் 1.30 மணிக்கு நடன தீபாராதனை, 3 மணிக்கு அழகியகூத்தர் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் வே.பா. ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் ரா. சுப்புலட்சுமி, ஊர்ப் பொதுமக்கள் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai